நாங்க சரியா 'ரூல்ஸ்' பாலோ பண்றோம்... நீங்க மொதல்ல இதை 'கரெக்டா' செய்யுங்க... 'கிண்டலடித்த' பிரபல அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 18, 2020 12:43 AM

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஹைதராபாத், பெங்களூர் அணிகள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விட்டன. ஆனால் மற்ற அணிகள் இவ்வாறு செய்யவில்லை.

IPL 2020: Rajasthan Royals troll RCB for using the wrong logo

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி விராட் கோலியின் பெங்களூர் அணியை படுபயங்கரமாக கிண்டலடித்து இருக்கிறது. பெங்களூர் அணி வெளியிட்ட மேட்ச் பட்டியலில் சக அணியின் லோகோவையும் சேர்த்து வெளியிட்டு இருந்தது. அதில் ராஜஸ்தான் அணியின் லோகோ தவறாக இடம்பெற்று இருந்தது.

இதை சுட்டிக்காட்டும் வகையில், ''நாங்கள் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். ஆனால் சில அணிகள் முன்னதாகவே வெளியிட்டுள்ளன. இது எங்களுடைய லோகோ,'' என தெரிவித்து இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பெங்களூர் அணியை எப்படி கிண்டல் செய்யலாம் என்று காட்டமாக பதிலளித்து வருகின்றனர்.