‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. ‘தாய் செய்த அதிரவைக்கும் காரியம்’.. ‘தந்தை கண்முன்னே’ 1 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 06, 2019 11:07 AM

திருநெல்வேலி அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு தாயே ஒன்றரை வயது மகனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 year old boy baby beaten to death by mother in Tirunelveli

திருநெல்வேலி அருகே உள்ள பழங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜு-வடகாசி என்ற தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு சாமிநாதன் என்பவர் தினமும் பால் விநியோகித்து வந்துள்ளார். அப்போது சுவாமிநாதனுக்கும், ராஜுவின் மனைவி வடகாசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த ராஜு தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வடகாசி, சாமிநாதனுடன் சேர்ந்துகொண்டு குழந்தையை தரையில் வீசி அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜு அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் வடகாசி, சாமிநாதன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Tags : #MOTHER #1YEAROLD #BABY #BRUTAL #MURDER #HUSBAND #AFFAIR #TIRUNELVELI