'நீங்க பேசுங்க ஜி.. நான் பாத்துக்குறேன்' .. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன சபாநாயகர்.. நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Aug 22, 2019 05:17 PM
நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு நடுவே நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, தன்பாலின ஈர்ப்பளாரான, நாடாளுமன்ற உறுப்பினரின் 6 வார குழந்தையை சபாநாயகர் ட்ராவோர் மல்லார்டின் தன் கையில் வைத்துக்கொண்டு ஃபீடிங் பாட்டில் மூலம் பால் கொடுத்தபடி, விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம், நிர்வாகம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்த நாடாளுமன்ற எம்.பி-யான காஃபே-விடம், ‘நீங்கள் தொந்தரவு இல்லாமல் பேசுங்கள், குழந்தையை நான் கவனித்துக்கொள்கிறேன்’ என்று சபாய்நாகர், காஃபேவின் 6 வார குழந்தையை, தன்னகத்தே வைத்துக்கொண்டு அவையை வழிநடத்தினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு, மல்லார்டின் தனது ட்வீட்டில், ‘இன்று என்னுடன் ஒரு விஐபி அவையில் இருந்தார்’என்று பதிவிட்டிருந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி-யான காஃபே ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதும், அவரும் அவருடைய இணையும் இணைந்து ஒரு வாடகைத் தாய் மூலம் இந்த குழந்தையை பெற்றெடுத்து 6 வாரங்கள் ஆகியது குறிப்பிடத்தக்கது.
