‘ராணுவத்தில் மேஜர் பதவி’!.. பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 31, 2019 05:22 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் திசரா பெரேரா அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

Thisara Perera joins Sri Lankan Army in Gajaba Regiment

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான திசாரா பேராரா இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,210 ரன்களும், 79 டி20 போட்டிகளில் விளையாடி 1,169 ரன்களும், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 203 ரன்களும் எடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் மேஜராக திசரா பெராரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திசாரா பெராரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘ராணுவ கமாண்டர் லெப்டினெண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின் பேரில் கஜாபா ரெஜிமென்டில் ராணுவ மேஜராக பணியில் சேர்ந்தேன். இதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியமாகவும், பரிசாவும் கருதுகிறேன். என்னுடைய சிறப்பான பணியை ராணுவத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் தொடர்ந்து செய்வேன்’ என பதிவிட்டுள்ளார்.

Tags : #SRILANKA #CRICKET #THISARAPERERA #ARMY