'துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது'... ‘கணநேரத்தில்’... 'தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 21, 2019 01:51 PM

துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது, கார் மீது, கண்டெய்னர் லாரி மோதியதில், தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car and container lorry got accident near chennai 3 died

ஆந்திர மாநிலம், கடப்பா அருகே நிலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்கிரண். இவரது தாயார் முனியம்மாள், துபாயில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில்,  துபாயில் இருந்து, சென்னை விமானம் நிலையம் வந்த தாய் முனியம்மாளை அழைத்துக் கொண்டு, மகன் சாய்கிரண், காரில் ஓட்டுநர் பவன் கல்யாணுடன் என்பவருடன், சொந்த ஊரான நிலுப்பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அதிகாலையில் ஓபுலவாரிபள்ளி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது இவர்கள் வந்த கார்மீது, மகராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று நேராக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் சென்ற தாயார் முனியம்மாள், மகன் சாய் கிரண், ஓட்டுநர் பவன் கல்யாண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #TELANGANA #ACCIDENT #KADAPA #CHENNAI