‘பயங்கர கார் விபத்தில்’.. ‘மேல் படிப்புக்காக கனடா சென்ற’.. ‘இளைஞர்களுக்கு நடந்த பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Oct 08, 2019 02:28 PM
கனடாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் உள்ள ஆயில் ஹெரிட்டேஜ் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் காரின் ஓட்டுநர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் பயணித்த 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய 3 இளைஞர்களும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 20 வயதுமதிக்கத்தக்க இவர்களில் தன்வீர் சிங் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக கனடா சென்றுள்ளார். மற்ற 2 பேரும் ஏப்ரல் மாதம் அங்கு சென்றுள்ளனர்.
Tags : #CANADA #CAR #CRASH #ACCIDENT #STUDENTS #YOUNGSTERS #PUNJAB
