ஹார்ட்டின் காமிச்ச ‘கை’ என்ன தூக்கிட்டு வருதுன்னு பாருங்க.. ‘சிக்ஸ் பேக்’ உடன் இருந்த காசியின் தற்போதைய நிலை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் 150-க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசி தற்போது விசாரணைக்காக நீதிமன்றம் வந்தார்.

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணைக்கு அவரை நீதிமன்றம் அழைத்து வந்தபோது புதுமாப்பிள்ளை மிகவும் உற்சாகமாக வந்தார். அப்போது போலீசார் முன்பே நீதிமன்றத்தில் நின்ற சில பெண்களை நோக்கி கையால் ஹார்ட்டின் காண்பித்தார்.
பணம், செல்வாக்கு இருப்பதால் எப்படியும் தப்பி விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்துள்ளார். மேலும் அவரது லேப்டாப்பில் இருந்த வீடியோக்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டு விட்டதால், போலீசாரால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நம்பிக்கையில் காசி இருந்துள்ளார்.
இதனை அடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட காசி மீது சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதனால் சிறையில் இருந்த காசியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காசியை சிறப்பான கவனிப்புடன் போலீசார் கசக்கிப் பிழிந்துள்ளார்.
இதனால் போன முறை ஹார்டின் விட்ட காசி இந்த முறை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டபோது, கையில் கட்டப்பையை கொடுத்து போலீசார் நடக்க வைத்தனர். சிக்ஸ் பேக்குடன் வலம் வந்த காசியை சிறை வாழ்க்கையும், போலீசாரின் கவனிப்பும் எலும்பும் தோலுமாக உருமாற்றியுள்ளது. மேலும் லேப்டாப்பில் டெலிட் செய்யப்பட்ட 800-க்கும் மேற்பட்ட வீடியோக்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் மீட்டுள்ளனர்.
அதில் பெரும்பாலான வீடியோக்கள் அப்பெண்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரது நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி வைத்த ஐடிகளை ஆய்வு செய்தபோது ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடைந்தையாக இருந்த காசியின் கூட்டாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் உள்ள சில இளம்பெண்களின் விபரங்களை சேகரித்து அவர்களை தொடர்பு கொண்டு புகார் பெற போலீசார் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. காசியின் மீது 6 பாலியல் வழக்குகள், ஒரு கந்துவட்டி வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர்களது பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்களை ஏமாற்றிவிட்டு ஜாமீனில் தப்பி விடலாம் என நினைக்கும் நபர்களுக்கு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை மரண பயத்தை கொடுத்திருக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
