'என் உடல் என் விருப்பம்'... 'திடீரென நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு'... வெளியான பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்"என் உடல் என் விருப்பம்" என்ற வார்த்தைகளைத் தனது நிர்வாண உடலில் எழுதிக்கொண்டு பெண் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமான பெண்ணியக் குழுவின் உறுப்பினர் ஃபெமன். இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் போலந்து நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான மொத்த தடைக்கு எதிராக இன்று உக்ரைன் நாட்டின் கியேவில் உள்ள போலந்து தூதரகத்திற்கு வெளியே நிர்வாண போராட்டத்தை நடத்தினார். அப்போது நிர்வாணமாகத் தோன்றிய அவர், "என் உடல் என் விருப்பம்" என்ற ஆங்கில வார்த்தைகளைத் தனது உடலில் எழுதியிருந்தார். இதனால் போராட்டத்தில் பரபரப்பு நிலவிய நிலையில், விரைந்து செயல்பட்ட போலீசார் ஃபெமனை உடனடியாக கைது செய்தார்கள்.
கடந்த வாரம் போலந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், தவறான வழியிலான கருவுறுதலைக் கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது அரசியலமைப்பிற்கு "பொருந்தாது" என்று தீர்ப்பளித்தது. இது அங்குச் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அங்குப் போராட்டம் வெடித்துள்ளது. அங்குப் போராட்டம் நடத்திய பெண்கள், "பாதுகாப்பான கருக்கலைப்புகளைத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்தால், பெண்கள் அரசாங்கத்தைக் கருக்கலைக்க முடிவு செய்யலாம்" எனக் கோஷமிட்டார்கள்.
போலந்து நாட்டில் பாலியல் வன்கொடுமை அல்லது முறையற்ற உறவு அல்லது தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
