"அடுத்த '2' வருஷம் 'ஐபிஎல்' ஆடாதீங்க..." மும்பை அணியை குறிப்பிட்டு 'ட்வீட்' போட்ட 'வாசிம்' ஜாஃபர்,,.. " எதுக்கு அப்டி சொல்லியிருப்பாரு??.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது.
ஐபிஎல் தொடர்களிலேயே மிகவும் பலம் வாய்ந்த அணியாக மும்பை அணி வலம் வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த முறையும் தொடக்கம் முதலே மற்ற அணிகளை விட ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி, அதே உத்வேகத்துடன் கோப்பையையும் தட்டிச் சென்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர், மும்பை அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில், 'மும்பை அணிக்கு வாழ்த்துக்கள். அடுத்த இரண்டு ஆண்டுக்கு நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நீங்கள் வென்று விட்டீர்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations @mipaltan! Now go take a couple of years off, you've earned it. 😉 #IPL2020 #IPLfinal #MIvsDC #RohitSharma pic.twitter.com/rZYnpoRk9A
— Wasim Jaffer (@WasimJaffer14) November 10, 2020
அதாவது, மும்பை அணி தான் ஐபிஎல் கோப்பையை அதிக முறை (5) கைப்பற்றியுள்ளது. வேறு எந்த அணிகளும் இந்த சாதனையை செய்ததில்லை. அதற்கு அடுத்த படியாக சென்னை அணி 3 கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. 2 ஆண்டிற்கு மும்பை அணி ஓய்வு எடுத்துக் கொண்டாலும், அந்த அணியின் சாதனையை முறியடிக்க முடியாது. அதனைக் குறிப்பிட்டு தான் ஜாஃபர் அப்படி தெரிவித்துள்ளார்.