'கண் இமைக்குற நொடியில...' 'கார் கண்ணாடியில அடிக்கப்பட்ட ஸ்பிரே...' 'ஒடச்சு சில்லுசில்லாக்கி...' 'அடுத்த செகண்டே வந்த அலாரம்...' என்ன நடந்தது...?- நெஞ்சை பதற வைத்த சிசிடிவி காட்சிகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ட்ரிஸில் பிரஸ்டோ என்னும் ஹோட்டல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே அமைந்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் அமைந்திருந்தாலும், எதற்கும் துணிந்த மர்ம கும்பல் ஒன்று ஹோட்டலுக்கு நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரிஸில் பிரஸ்டோ ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக், தன் காரில் நேற்று இரவு ஹோட்டலுக்கு வந்த சமயத்தில், ஹோட்டல் வாசலில் நின்றுகொண்டிருந்த காவலாளியிடம் வந்த இரண்டு பேர் பேச்சுக் கொடுத்து, அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு கும்பலில் இருந்த வேறொருவர், யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட்டபடி அங்கு நிற்க, மற்றொருவன் கார் கண்ணாடியில் ஸ்பிரே அடித்து, எளிதாக ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு, காருக்குள் இருந்த பணப் பையைத் திருடியுள்ளனர்.
அப்போது கார் ஜன்னல் கண்ணாடி உடைத்தபோது வந்த அலாரம் சத்தம் கேட்டதும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரிலேயே நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
