'ஒழுங்கா என்கூட வாழு...' 'அப்படியொரு கல்யாணமே நடக்கல...' 'அப்போ எப்படி மேரேஜ் சர்டிபிக்கேட்...? - அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Nov 11, 2020 10:02 PM

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

Thoothukudi girl petition cancel fake marriage certificate

அந்த மனுவில், " நான் +2 படிக்கும்போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாக காதலித்தார். +2 முடித்து நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் படிப்பதற்காக சேர்ந்தேன். தற்போது டார்வின் தன்னுடன் சேர்ந்த வாழுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார்.

டார்வினுக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் 08-08-2017-ல் திருமணம் நடைபெற்றதாக கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து சான்றிதழ் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்,  கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்றபோது, போலி ஆவணங்களை பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

ஆவணங்களுடன் ஆலைய பங்கு தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பங்கு தந்தையிடம் விசாரித்தபோது, சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் தினத்தில் ஆலயத்தில் அப்படியொரு திருமணம் நடைபெறவில்லை என்றும், அதுபோன்ற சான்றிதழை தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். போலி சான்றிதழ்களை பயன்படுத்தி எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்துள்ளார் டார்வின்.

மேலும், திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் அந்த தினத்தில் நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் (Practical Exam) பங்கேற்றேன். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு உள்ளது. இருப்பினும் போலி திருமணப்பதிவு அடிப்படையில் தன்னுடன் வந்து வாழுமாறு டார்வின் ஜனவரி மாதம் முதல் என்னை மிரட்டி வருகிறார். எனவே கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்துசெய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தேன். அவர் என் மனுவை நிராகரித்துவிட்டார்.

ஆகவே, கீழுர் சார்பதிவாளர் வழங்கிய திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழுர் சார்பதிவாளர் மற்றும் டார்வின், புன்னைக்காயர் புனித சேவியர் ஆலய பங்குதந்தை பிராங்கிளின் ஆகியோர் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thoothukudi girl petition cancel fake marriage certificate | Tamil Nadu News.