'சொந்தக்காரங்க யாரும் தேவையில்லை...' 'இப்படி வாழுறது தான் எனக்கு நிம்மதி...' - தெருவில் வாழும் முன்னாள் காவல் அதிகாரி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Nov 09, 2020 03:52 PM

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் தனக்கு பணம், சொந்த பந்தம் எதுவும் வேண்டாம் என பிச்சைக்காரர் போல சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka former police officer Lives street say no money

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டதை சேர்ந்தவர்  மதுசூதனன். இவர் சிந்தாமணி டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்து கடந்த 2011-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 

மதுசூதன்ராவ்க்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி உள்ள நிலையில் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு பணி ஓய்வூதியத் தொகையாக மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த மதுசூதன்ராவ் ஓய்வுக்கு பின் வீட்டில் இருந்து மது போதைக்கு அடிமையாகியுள்ளார். மேலும் அவரின் மனைவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதனின் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்த துக்கத்தால் மேலும் மது பழக்கம் அதிகமாகியுள்ளது. அவரது மகன் இதனை கண்டித்தபோதும் மதுசூதன்ராவ் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுசூதன் ராவை, அவரது மகன் வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டுள்ளார்.

மேலும் மதுக்கு அடிமையாகிய மதுசூதனராவ் மகள் வீட்டுக்கும் செல்ல முடியாமல் சாலையோரத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.அவரது வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் இருப்பு இருந்தும், தற்போது அவர் பழைய பொருட்களை வீதி, வீதியாக தேடிச் சென்று சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். மேலும் குப்பை கழிவுகளை சேகரிக்கும் சாக்கு மூட்டையுடன் கந்தலான சட்டை அணிந்து தாடியுடன் பிச்சைக்காரர் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் காவல்துறை அதிகாரியின் இந்த நிலை அறிந்த சிக்பள்ளாப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஜி.கே.மிதுன்குமாருக்கு தெரியவந்ததுள்ளது.அதையடுத்து மதுசூதன்ராவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க சிந்தாமணி டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் போலீசார், மதுசூதன் ராவை சந்தித்து தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறிய மதுசூதன் ராவ், எனக்கு சொந்தம் என்று யாரும் வேண்டாம். எனக்கு இந்த தெரு வாழ்க்கையே போதும். இதுவே எனக்கு நிம்மதியாக இருக்கிறது. மனநிம்மதிக்காக தான் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். இந்த வாழ்க்கையே எனக்கு போதும் எனக் கூறி போலீசாரின் உதவியையும் தட்டிகழித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka former police officer Lives street say no money | India News.