#VIDEO: 'இப்படிதான் போராடுவாங்கள?'.. அமெரிக்க தேர்தல் சர்ச்சை போராட்டத்தில்.. இளம் பெண் செய்த ‘பரபரப்பு’ காரியம்! கொதித்தெழுந்த போலீஸ் சங்கங்கள்!.. ‘NYPD’ கடுமையான ட்வீட்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தேர்தல் போராட்டத்தின் போது காவல் அதிகாரியின் முகத்தில் உமிழ்ந்த 24 வயது பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தான் வெற்றி பெற்றதாக கூறி தேர்தலை முடிவை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 24 வயது பெண்ணான தேவினா சிங் என்பவர் காவல் அதிகாரி ஒருவரிடம் தவறாக பேசியதுடன் அவருடைய முகத்தில் உமிழ்ந்துள்ளார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
A young woman was arrested after she spat in an officer’s face after screaming, “F–k you, fascist,” tonight in the West Village. pic.twitter.com/cfgVLYJ5pc
— elizabeth meryl rosner (@elizameryl) November 5, 2020
அந்தப் பெண் பேசியதில் வார்த்தைகள் சரியாக புரியவில்லை எனினும் காவல் அதிகாரி ஒருவரின் முகத்தில் அந்தப் பெண் உமிழ்ந்ததும் அருகிலிருந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த பெண்ணின் செயலுக்கு என்.ஒய்.பி.டி மற்றும் போலீஸ் சங்கங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன.
அத்துடன் இது போன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது, கிளர்ச்சி செய்வார்கள் இப்படியான குற்றங்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று என்.ஒய்.பி.டி ட்வீட் செய்துள்ளது.

மற்ற செய்திகள்
