'இவரு 5 நிமிஷம் பேசினாலே போதும்... செம்ம மோட்டிவேட்டிங்கா இருக்கும்!'.. பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தொழிலதிபருக்கு... 120 ஆண்டுகள் சிறை தண்டனை!.. பகீர் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

அமெரிக்காவில் நிக்ஸிவம் நிறுவனர் கெய்த்ரானியர். இவர் வாழ்க்கை நெறிமுறைகள் தொடர்பான தன்னம்பிக்கை பேச்சுகளை பேசி வந்தார். இதனால் இவருக்கு பலர் தீவிர தொண்டர்களாக மாறியுள்ளனர்.
நியூயார்க்கை தலைநகராக கொண்டு செயல்படும் அவரது மல்டி லெவல் மார்க்கெட்டிங் அமைப்பில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கெய்த்ரானியர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் நூற்றுக்கணகான பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகவும், சிறுவர்களை ஆபாச படங்கள் எடுத்ததாக புகார்கள் கூறப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கெய்த்ரானியருக்கு 120 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மற்ற செய்திகள்
