‘ஆட்ட நாயகனை தாரை வார்த்து கொடுத்த அணி’...!! ‘இப்டி ஆகும்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டாங்க’...!! ‘மொத்தமும் மாறிப் போச்சே’...!! ‘ஆச்சரியத்தில் ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் டிரென்ட் போல்ட். இந்நிலையில் இவர் பற்றிய சுவராஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
![Mumbai Indians bought trent boult a year back from Delhi capitals Mumbai Indians bought trent boult a year back from Delhi capitals](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/mumbai-indians-bought-trent-boult-a-year-back-from-delhi-capitals.jpg)
ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி நேற்றுடன் நடந்து முடிந்தது. இதில் 5-வது முறையாக மும்பை அணி கோப்பையை வென்றது. இதில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், நியூசிலாந்து வீரருமான ட்ரென்ட் போல்ட் அந்த அணி ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்தவர். இவரைப் பற்றி தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, 2020 ஐபிஎல் சீசனுக்கு முன், ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை அணி மாற்றம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு சிறந்த மற்றும் புதிய ஸ்விங் பந்துவீச்சாளர் தேவை என்பதால் டெல்லி அணி பயன்படுத்தாமல் இருந்த ட்ரென்ட் போல்ட்டை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ள வலை வீசியது.
,இதையடுத்து டெல்லி அணி அவரை பணம் பெற்றுக் கொண்டு, மும்பை அணியிடம் தாரை வார்த்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் ட்ரென்ட் போல்ட்டை மும்பை அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த சீசனில் பவர்பிளே ஓவர்களில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்தார் அவர்.
இந்த ஒரே சீசனில் போட்டிகளின் முதல் ஓவரில் மட்டும் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார். அதுவும் இறுதிப்போட்டியில் தன் பழைய அணிக்கு எதிராக விளையாடிய ட்ரென்ட் போல்ட், முதல் பந்திலேயே, டெல்லி அணியின் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். பிளே ஆஃப் சுற்றிலும் முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் இரண்டு வீரர்களை வீழ்த்தி டக் அவுட் செய்தார்.
மேலும் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி மும்பை அணி ஜெயிக்க காரணமாக இருந்ததால், அவருக்கு இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் எப்படி சரியாக கணித்து, டெல்லி அணியின் வீரரை முன்பே விலைக்கு வாங்கி அதே அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதில் பரிதாப நிலையை அடைந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிதான். நல்ல வீரரை தவறாக கணித்து வெளியேற்றியதோடு, அவரே தங்கள் அணிக்கு 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எமனாக வருவார் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்து இருக்க மாட்டார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் டெல்லி அணியின் கேப்டனான வீரேந்திர சேவாக், டெல்லி அணி, ட்ரென்ட் போல்ட்டை மட்டுமில்லாது, ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நல்ல வீரர்களையும் தாரை வார்த்துள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)