‘நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க’.. ‘ஒரு பயலும் செயினை பறிக்க முடியாது!’.. ‘திருடர்களுக்கு டஃப் கொடுக்கும்’ சென்னை சிட்டி போலீஸின் புதுமுயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தி நகரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஷாப்பிங் போகும் பெண்களுக்கு நகை திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் போலீஸார் நகைக் கவசம் வழங்கியுள்ளனர்.
தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் நிலையிலும், ஐப்பசி மாதம் வந்துவிட்டது என்பதாலும் விஷேஷங்களுக்காக மக்கள் தொடர்ச்சியாக விற்பனையகங்களில் கூடுகின்றனர். இதனால் சென்னை தி.நகரில் மக்கள் துணிக்கடை, நகைக்கடை உள்ளிட்டவற்றுக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தி.நகரில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்களுக்கு கொரோனாவால் உண்டாகும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஏமாரும் நேரத்தில் அவர்களின் நகைகளை அபகரித்து, கைவரிசையை காட்ட முயற்சிக்கும் திருடர்களிடமிருந்து அவர்களின் நகைகளை காக்கும் விதமாக துணி கடைகளுக்கு ஷாப்பிங் செய்ய வரும் பெண்களுக்கு போலீசார் நகை கவசத்தை வழங்கினர்.
அந்த நகை கவசத்தை கழுத்து வழியாக போட்டுக்கொண்டு ஜிப் போட்டுக்கொண்டால், தங்க நகை முதல் எந்த நகை வரையிலும், நகைகளை திருடர்கள் எளிதில் திருட முடியாது என்பதால் இந்த ஏற்பாட்டை போலீசார் செய்துள்ளனர். இது குறித்து பேசிய பெண்கள் இது மிகவும் பயனுள்ள ஏற்பாடாக இருப்பதாகவும் இந்த புதிய முயற்சிக்கு போலீசாருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.