'காசி சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தை'...'கைக்கடிகாரத்தில் இருந்த கேமரா'... 'சென்னை மாணவியை வலையில் வீழ்த்தியது எப்படி'?... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 10, 2020 11:15 AM

பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாதோ, அதே போன்று நாகர்கோவில் காசியின் வழக்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் தான் காசி. இவர் இன்ஸ்டாகிராமில் பெண்களிடம் நட்பாகப் பழகி, பின்னர் காதலிப்பதாகக் கூறி அவர்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து, அதை வைத்து பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் காசி மீது 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் மீது ஒரு கந்துவட்டி வழக்கும் உள்ளது.

Kasi Cheated and Extorted Money from me, Chennai Girl filed a case

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் காசி மீது புகார் அளித்துள்ளார். காசி தன்னை காதலிப்பது போல நடித்து ஏமாற்றியதோடு பணத்தையும் மிரட்டிப் பறித்ததாக அந்த மாணவி கொடுத்துள்ள புகார் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாகக் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சென்னை மாணவியுடன் காசிக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை காசி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையைச் சேர்ந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நட்பாகப் பழகிய நிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாகவே இருவரும் பேசி வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் காசி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதை உண்மை என அந்த பெண்ணும் நம்பிய நிலையில், அந்த பெண்ணை பார்க்கக் காசி சென்னைக்கு வந்துள்ளார்.

Kasi Cheated and Extorted Money from me, Chennai Girl filed a case

பின்னர் அந்த கல்லூரி மாணவியை, நீ எனது ஊருக்கு வா என, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வரவழைத்துள்ளார். கன்னியாகுமரி வந்த மாணவியைக் காசி காரில் பல்வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நான்கு வழிச் சாலையில் காரை நிறுத்திய காசி, நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என கூறி தனிமையில் இருக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் மறுக்கவே, நான் உன்னைக் கைவிட மாட்டேன், உன்னைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி காரிலேயே இருவரும் தனிமையில் இருந்துள்ளார்கள்.

Kasi Cheated and Extorted Money from me, Chennai Girl filed a case

அப்போது தனது அரக்கத் திட்டத்தைச் செயல்படுத்திய காசி, தனது கை கடிகாரம் மற்றும் மொபைல் கேமரா மூலம் அங்கு நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் நாட்கள் செல்ல செல்ல தனது கோர முகத்தைக் காட்டிய காசி, அந்த பெண்ணிடம் மிரட்டி பணத்தைப் பறித்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் அந்த கல்லூரி மாணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவியிடம் இருந்து எவ்வளவு பணத்தைக் காசி மிரட்டி பறித்தார்? இதில் காசியின் நண்பர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு காசியிடம் விசாரணை நடத்தச் சென்னையிலிருந்து சைபர் கிரைம் போலீசாரும் வந்துள்ளனர்.

Kasi Cheated and Extorted Money from me, Chennai Girl filed a case

லேப்டாப்பில் உள்ள முக்கிய தகவல் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. மேலும், காசி தொடர்பான மற்ற பாலியல் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது. இதனால் காசி வழக்கு மேலும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kasi Cheated and Extorted Money from me, Chennai Girl filed a case | Tamil Nadu News.