'அந்த பையன் உனக்கு வேண்டாம்'... 'எச்சரித்த பெற்றோர்'... 'பெண்ணின் தந்தைக்கு வாட்சப்பில் வந்த மெசேஜ்'... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் காதலித்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்காத நிலையில், அந்த பெண்ணின் காதலன் செய்த செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவை புதூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். ஒரே கல்லூரி என்பதால் இருவரும் பழகி வந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த சூழ்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே இளம்பெண் வீட்டிற்குச் சென்ற நிலையில் அங்கிருந்து தனது காதலனோடு பேசி வந்துள்ளார். இது பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் தங்களது பெண்ணை கண்டித்ததோடு, படிக்கின்ற நேரத்தில் படிப்பில் கவனத்தைச் செலுத்து எனக் கூறியுள்ளார்கள். மேலும் அந்த பெண்ணின் காதலன் தேவேஷ்வரை தொடர்பு கொண்ட பெண்ணின் பெற்றோர், அந்த இளைஞரையும் கண்டித்ததோடு அவரிடமும் படிப்பில் கவனத்தைச் செலுத்து எனக் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பெண்ணின் தந்தைக்கும் தேவேஷ்வருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பெண் அந்த இளைஞரைக் காதலிக்க மறுத்துள்ளார். அதோடு தேவேஷ்வரோடு பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவேஸ்வர் காதலித்த போது இளம்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் பெண்ணுக்குத் தெரியாமல் எடுத்த ஆபாசப் படம் உள்ளிட்டவற்றை, பெண்ணின் தந்தையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன இளம்பெண்ணின் தந்தையிடம், உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளார். ஆனால் இளைஞரின் மிரட்டலுக்குச் செவி சாய்க்காத இளம்பெண்ணின் தந்தை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடியிலிருந்த தேவேஷ்வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் எனப் பெண்ணின் தந்தையை மிரட்ட இளைஞர் செய்த கீழ்த்தரமான செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
