'தொலைக்காட்சி நடிகை கையும் களவுமாக கைது!'.. 'பொறிவைத்து காத்திருந்த போலீஸார்!'.. 'போதைப் பொருள் வாங்கிய அடுத்த நொடியே ஆப்பு!'..
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை அந்தேரியில் போதைப்பொருள் வாங்கியபோது தொலைக்காட்சி நடிகை ஒருவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை தொடர்ந்து போதைப் பொருள் விநியோகம் குறித்த விசாரணையை வடமாநில போலீசார் தீவிரப்படுத்தினர். இதனை அடுத்து தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் விவகாரத்தில் நடிகைகள் சிலரையும் கைது செய்தனர். தென்னிந்திய மற்றும் பாலிவுட்டின் முக்கிய நடிகைகளை விசாரிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் மும்பையில் வெர்சோவாவில், போதைப்பொருள் விற்பனையாளர் பைசல் யாசின் ஷேக் என்பவரிடம் கஞ்சா வாங்கியபோது மும்பை தொலைக்காட்சி நடிகையை போதை பொருள் தடுப்பு போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர். அத்துடன் நடிகை மற்றும் பைசல் யாசினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனினும் இந்த நடிகை யார் என்கிற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
