கொந்தளித்த கோவா மக்கள்!.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்.. ‘பட்டப்பகலில்’ இளம் நடிகை செய்த ‘பரபரப்பு’ காரியத்தால் பாயும் வழக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவாவில் உள்ள சபோலி அணையில் நிர்வாணமாக ஆபாச படம் எடுத்ததாக நடிகை பூனம் பாண்டே மீது கோவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த படப்பிடிப்பை தடுக்காததால் கனகோனா காவல் ஆய்வாளர்கள் இரண்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவா மாநிலம் கனகோனாவில் உள்ள சபோலி அணையில் ஆபாசப் படம் எடுத்ததாக பூனம் பாண்டே மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதையடுத்து அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் . இதனிடையே நேற்று கனகோனா பகுதி மக்கள் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த படப்பிடிப்பை தடுத்து நிறுத்தாத காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து அவர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் பட்டப்பகலில் எடுக்கப்பட்ட இந்த ஆபாச வீடியோ படப்பிடிப்புக்காகவும், கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டதற்காகவும் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவருடைய படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து பூனம் பாண்டேவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

மற்ற செய்திகள்
