திடீரென ‘வெடித்துச் சிதறிய’ டேங்கர்.. ‘மளமளவென’ பரவிய தீயால் ஏற்பட்ட பயங்கர விபத்தில்.. ‘23 பேர்’ பலி; ‘130 பேர்’ காயம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 04, 2019 03:10 PM

சூடானில் உள்ள செராமிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Fire Accident 23 killed In Explosion In Sudan Ceramics Factory

சூடான் தலைநகர் கார்ட்டூமில் அமைந்துள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென எரிவாயு டேங்கர் வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்துள்ள 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

செராமிக் டைல்ஸ் உற்பத்தி பணிகளுக்காக டேங்கரிலிருந்து எரிவாயுவை எடுக்கும்போது திடீரென டேங்கர் வெடித்துள்ளது. இதையடுத்து எரிபொருள் வாயு நொடிப்பொழுதில் பீங்கான் தொழிற்சாலையின் பிற பகுதிகளையும் தாக்கியதால் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அருகிலுள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவுவதை போராடித் தடுத்துள்ளனர். 

சலோமி செராமிக் தொழிற்சாலையில் 50 இந்தியர்கள் வேலை செய்துவந்த நிலையில் உயிரிழந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #FIREACCIDENT #SUDAN #CERAMIC #FACTORY #TANKER #EXPLOSION