1. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஓம் நமச்சிவாய முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

2. குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
3. 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை திருப்பி தர வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
4. ‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்து இன்று வழங்கப்படும் தீர்ப்பில் தெரியவரும்.
5. சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 490 -ஐ தொட்டுள்ளது. நேற்று மட்டும் 30 பேர் கொரோனா வைரஸ் மூலம் பலியானார்கள். மொத்தம் 24,324 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
6. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் சதம் அடித்துள்ளார்.
7. ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு எடுத்துள்ள முடிவில் தலையிடப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
8. டிஎன்பிஎஸ்சி தேர்வை போலவே, கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10. சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.83 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.76 ஆகவும் உள்ளது.
