'தமிழன் இப்பதான் முழிச்சு பாக்குறான்!'.. 'தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்வதற்கு'.. அதிரடி கிளப்பிய பாரதிராஜா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 03, 2020 06:57 PM

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்கிற தமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக பல்வேறு சமயங்களில் பதிவு செய்துரும் இயக்குநர் பாராதிராஜா, ‘ரஜினிகாந்த் தமிழகத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது’ என்று தற்போது புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். 

cant let rajinikanth to rule tamilnadu, Director bharathiraja

‘உங்கள் பூமியில் உங்கள் ஆள்வது போல், மராத்தியில் மராத்தியர்கள் ஆள்வது போல், அஸ்ஸாமில் அஸ்ஸாமியர் ஆள்வது போல், கேரளாவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆள்வது போல், கர்நாடகாவின் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஆவதுபோல், ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தன் முதல்வர் ஆகக்கூடாது?.. இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் இவங்க ஆளவில்லையா? அவங்க ஆளவில்லையா?ன்னு கேட்கக் கூடாது. ஏதோ தமிழன் தூக்கி தொலைச்சுட்டான். இப்பதான் கொஞ்சம் முழிச்சு பார்க்கிறான்’ என்று இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார். 

மேலும் பேசியவர், ‘எல்லாருமே இடம் பெயர்ந்து வந்தார்கள். வெள்ளைக்காரர்கள் போன பின்பு ஆங்கிலோ இந்தியனுக்கு இப்போது நாம் சலுகைகள் தருகிறோம். ஆனால் வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டதால்தானே விரட்டுனீங்க’ என்று கேட்டதோடு,  ‘தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமுறை பேட்டியில், புதிய தலைமுறை தரப்பில் இருந்து கேட்கப்பட்ட, ‘ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள்வதை அனுமதிக்க முடியாது என்கிறீர்கள்,

ஆனால் ரஜினியின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு அவரை வாழ்த்துகிறீர்கள். இந்த முரண்களை எப்படி பார்ப்பது?’ என்கிற கேள்விக்கு இயக்குநர் பாரதிராஜா இந்த பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJINIKANTH #DIRECTOR #POLITICS #BHARATHIRAJA