darbar USA others

"சில்லறை வாங்குவது போல்..." "மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய"... "மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 13, 2020 11:17 AM

மருந்தகத்தில் இருந்த பணத்தை நூதனமாக திருடிச் சென்ற நபர்களை, சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Two robbers theft a medical shop tactically near Chennai

சென்னை அடுத்த பெருங்களத்தூரில், செம்பருத்தி என்ற மருந்தகம் இயங்கி வருகிறது. மருந்து வாங்குவது போல் இருவர் மருந்தகத்திற்குச் சென்றுள்ளனர். அதில் ஒருவர், 10 ரூபாய் கொடுத்து மருந்து ஒன்றை வாங்கியுள்ளார். மற்றொருவன், 5 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ஆயிரத்திற்கு சில்லறை கேட்டுள்ளான். கடையில் இருந்த ஊழியர், 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரத்தை வழங்கியுள்ளார்.

கடை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்து, கவனத்தை திசை திருப்பி, அந்த 10 ஆயிரம் ரூபாயில் ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து மறைத்துவிட்டான். அதன் பின், 500 ரூபாய் நோட்டுகளாக வேண்டாம், 100 ரூபாய் நோட்டுகளாக வேண்டும் எனக் கூறி மீதயிருக்கும் 5 ஆயிரம் ரூபாயை மட்டும் கடை ஊழியரிடம் கொடுத்து லாவகமாக ஏமாற்றியுள்ளான்.

இந்நிலையில், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில், மருந்தகத்தை ஏமாற்றித் திருடிய சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROBBERY #CHENNAI #PERUNGALATHUR