'300 கோடி பரிசு ஜெயிச்சவர் செத்துட்டாரு'... ' நீங்க அந்த பரிச வாங்கிக்கோங்க'... '1 கோடி ரூபாய் அபேஸ்!'... 'ஆன்லைன் மோசடி'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manishankar | Jan 14, 2020 04:07 PM
வெளிநாட்டிலிருந்து 300 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளதாகக் கூறி, விவசாயிடம் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி, அருள்ஜோதி. வெளிநாட்டிலிருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து 300 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக, அவரை ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் அணுகியுள்ளது. அந்த பரிசுத் தொகையைப் பெற, பணம் செலவு செய்ய வேண்டுமெனக் கூறி, 40 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது.
ஆனால், திடீர் திருப்பமாக அருள்ஜோதி மரணமடைந்துவிடவே, அந்த கும்பல் 300 கோடி ரூபாய் என்ற ஆசைக் கனவை, அவர் உறவினர் பழனிவேல் என்பவரிடம் விதைத்துள்ளது.
மோசடி கும்பலின் பேச்சை நம்பி, பழனிவேலும் அவர்கள் சொன்ன தொகையை பல்வேறு தவணைகளாகக் கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து, பழனிவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டு, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து, முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில், அந்த கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.