'அதிவேகத்தில் வந்த ரயில் மீது மோதிய ஸ்கூட்டர்'... 'நூலிழையில் தப்பிய சம்பவம்'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Oct 01, 2019 04:01 PM

ரயில் மீது ஸ்கூட்டர் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் ஒருவரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.

freight train ploughs into a scooter rider, he escapes in china

சீனாவின் மான்ஷான் நகரத்தில் உள்ளது டங்க்டூ என்ற ஊர். இங்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, சுமார் 7.33 மணியளவில் ND5 என்ற சரக்கு ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை சிறிதும் கவனிக்காமல், நஞ்சிங்-வூகு ரயில்வே பகுதியில், ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அதிவேகத்தில் வந்த ரயில் மீது, அவருடைய ஸ்கூட்டர் மோதியது.

இதில் அவர் சாலையில் தூக்கிவீசப்பட்டார். அவருடைய ஸ்கூட்டர் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த அவரை, ரயில்வே அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Tags : #CHINA #SCOOTER #TERRIFIC #ACCIDENT