WATCH VIDEO: 'நொடி'ப்பொழுதில் இடிந்த பாலம்..வெடித்துச்சிதறிய டேங்கர்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Oct 01, 2019 11:16 PM
தைவான் நாட்டின் வடகிழக்கு துறைமுகப் பகுதியில் உள்ள 140 அடியுயர பாலமொன்று இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில் 14 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் பலியாகினர்.இந்த விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் சுமார் 60 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Bridge collapse in Yilan County, Taiwan.. pic.twitter.com/I0vTH0d31a
— Pramod Madhav (@madhavpramod1) October 1, 2019
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய தீயணைப்பு செய்தித்தொடர்பாளர் சு ஹாங் வீ கூறுகையில்,''இந்த விபத்தின்போது டேங்கர் லாரி கவிழ்ந்து மூன்று படகுகளை சிதறடித்தது.டேங்கர் மீதும் தீப்பிடித்தது.ஆனால் வாகனத்திற்கு அப்பால் தீ பரவவில்லை.தற்போது மீட்கப்பட்டவர்களை மருத்துவனையில் அனுமதித்து உள்ளோம்,''என்றார்.
பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.எனினும் இதுகுறித்து விசாரணை நடத்திட அந்நாட்டு அதிபர் சாய்-இங் வென் உத்தரவு பிறப்பித்துள்ளார்..
