அடேங்கப்பா! 'இத்தனை' லட்சமா?..'ரோஜாவுக்கு' சம்பளத்தை 'வாரிவழங்கிய' ஜெகன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 05, 2019 10:31 PM

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான நடிகை, ரோஜாவுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

MLA Roja Gets Big Salary as APIIC Chairman, Details Here!

நகரி தொகுதியில் 2-வது முறையாக நடிகை ரோஜா எம்எல்ஏவாக தேர்ந்து  எடுக்கப்பட்டார். ஆனால் ஜெகனின் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் அவருக்கு ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை ஜெகன் வழங்கி உள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு வழங்கப்படும் சம்பள விவரம் தெரியவந்துள்ளது. அவருக்கு மாத சம்பளமாக 2 லட்ச ரூபாயும், அலவன்ஸ் போன்றவைகளுடன் சேர்த்து 3.82 லட்ச ரூபாய்  கிடைக்கும். போக்குவரத்து அலவன்ஸ் 60 ஆயிரம் ரூபாய், தங்குமிடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய், தனிப்பட்ட சலுகைகளுக்கு 70 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் கட்டணமாக 2000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் மாதம் 3.82 லட்ச ரூபாய் ரோஜாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகன் வேலைவாய்ப்பு தொடங்கி பல்வேறு வழிகளிலும் ஆந்திர மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #ROJA #JAGANMOHANREDDY