‘தந்தைக்கு நேர்ந்த அதே இடத்தில்’... ‘மனைவியும், மகளும்'... 'கதறித் துடித்த கணவர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 04, 2019 03:41 PM

குழந்தைகளை பள்ளி வேனில் ஏற்றிவிட இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother and daughter died in accident while crossing the road

நாமக்கல் மாட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வாத்தியார் தோட்டம், பகுதியில் வசித்து வந்தனர் ஜெயக்குமார் (37), சித்ரா தம்பதியினர். இவர்கள் இருவரும் மின்வாரிய அலுவலகத்தில் வெவ்வேறு இடங்களில் வணிக உதவியாளராக வேலைப்பார்த்து வந்தனர். இவர்களுக்கு யஷ்வந்த் (9) என்ற மகனும், இன்சிகா (7) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரையும், பள்ளி வேனில் ஏற்றிவிட, எப்போதும் சித்ரா வேலைக்கு செல்லும்போது, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வார்.

வழக்கம்போல், மகனை பள்ளிவேனில் ஏற்றிவிட்டு, பின்னர், மகளை வேறு ஒரு பள்ளிவேனில் ஏற்றிவிட, இருசக்கர வாகனத்தில் சர்வீஸ் ரோட்டில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த லாரி மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேஇடத்தில் தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சித்ராவின் மாமனார் மீது வாகனம் மோதியதில், அவர் கோமாநிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அதேஇடத்தில் மகளும், மனைவியும் விபத்தில் பலியானதைக் கண்டு ஜெயக்குமார் கதறித் துடித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

Tags : #ACCIDENT