‘இனி நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி?’... ‘கொரோனாவின் கோரம்’... ‘விளையாட்டு உலகை கலங்கடித்த’... ‘21 வயது பயிற்சியாளருக்கு நேர்ந்த துயரம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 17, 2020 01:48 PM

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இளம் பருவத்தினரை அதிகளவில் கொரோனா தாக்காது என்று கூறப்பட்டு வந்தநிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 21 வயது இளம் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உலகை உலுக்கியுள்ளது.

21 year old football coach Francisco Garcia passes away

ஸ்பெயின் நாட்டின் கால்பந்தாட்ட கிளப் அணியான அட்லெடிகோ போர்ட்டா ஆல்டாவில் இளம் வயது அணிக்கான பயிற்சியாளராக பணி புரிந்துவந்தவர் 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா. சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு லுகேமீயா (leukemia) இருப்பதும், கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கார்சியா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இளம் பயிற்சியாளர் காலமானதால் ஸ்பெயின் விளையாட்டு உலகுக்கு சோகமான நாளாக இது மாறியுள்ளது.

விளையாட்டு உலகை கலங்கடித்துள்ள இவரது மரணம் குறித்து அட்லெடிகோ போர்ட்டா ஆல்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறோம். இப்போது, ​​நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன செய்வது, பிரான்சிஸ். லீக்கில் நாம் எவ்வாறு தொடர்ந்து வெற்றி பெறப் போகிறோம். எப்படி என்று எங்களுக்குத் தெரியாது.

ஆனால், நாங்கள் உங்களுக்காக வெற்றிபெறுவோம். நாங்கள் உங்களை மறக்க மாட்டோம், நிம்மதியாக ஓய்வெடுங்கள். என்றென்றும் உங்கள் நினைவில்” என்று உருக்கமாக கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட 300 பேர் இறந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்பெயினில் உள்ள மற்றொரு கால்பந்து கிளப்பான வாலன்சியாவை சேர்ந்த கேரி,கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

Tags : #FOOT BALL COACH #SPANISH #FRANCISCO GARCIA #CORONAVIRUS #SPAIN #DIED