"யாரைக் கேட்டு என்.ஆர்.சி.க்கு ஆதரவாக வாக்களித்தீர்கள்?..." அமைச்சர் 'செல்லூர் ராஜு'வை.... கேள்விகளால் 'வறுத்தெடுத்த' பெண்மணி...
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர்கள், செல்லூர் ராஜு மற்றும் ராஜேந்திரபாலாஜி ஆகியோரிடம் பெண்மணி ஒருவர், "என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள் என கேள்வி எழுபியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் கூட்டுறவு துறை சார்பில் பெட்ரோல் விற்பனை நிலைய தொடக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தனர்.
அப்போது, கூட்டுறவு சங்க தலைவி பாத்திமா என்பவர், என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள் என்றும் இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர்கள் இருவரும், இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறி அவரை சமாதானப்படுத்தினர்.
