'ரஜினி மலை' 'அஜித் தல'... "இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள்..." சொன்ன 'அரசியல்வாதி' யார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 15, 2020 04:55 PM

ரஜினி மலை. அஜித் தல. ரஜினிக்கு நிகர் அஜித் மட்டுமே என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

Ajith is the only matched by the rajini-Minister Rajendrabalaji

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இது அதிமுக.,வின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்து வரப்போகும் அதிமுக ஆட்சிக்கான முதல் பட்ஜெட், வரியில்லாத பட்ஜெட், யாரையும் பாதிக்காத பட்ஜெட், முத்தான பட்ஜெட். என அதிரடியாக பேசினார்.

நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐ.டி ரெய்டு பற்றி கேட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு, விஜய் வீட்டில் நடந்த ஐடி., ரெய்டுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார். இதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர்கள் ரஜினி, அஜித் குறித்து பேசிய அவர்,  ரஜினிக்கு நிகர் யாரும் கிடையாது. அவருக்கு நிகரான நடிகர் அஜித் மட்டுமே. ரஜினி மலை. அஜித் தல. இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள் என புகழ்ந்து கூறினார்.

Tags : #RAJINIKANTH #AJITHKUMAR #VILUPURAM #POLITICIAN #RAJENDRABALAJI