VIDEO: 'பேரன் மாதிரி நெனச்சதால தான்'... சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த அமைச்சர்!.. நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 06, 2020 03:19 PM

பேரன் மாதிரி இருந்ததால் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

minister dindigul seenivasan clears the latest controversy

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து, அமைச்சர் அவருடைய செருப்பை அகற்ற சொன்னார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிறுவர்களை எனது பேரன்கள் போல் நினைத்ததால் தான் அவர்களை உதவிக்கு அழைத்தேன்; சிறுவர்களை காலணியை கழற்ற சொன்னதில் எந்த உள் நோக்கமும் இல்லை; பெரியவர்களை அழைத்தால் தவறாகி விடும் என்பதால் சிறுவர்களை அழைத்தேன் என கூறியுள்ளார்.

Tags : #MINISTER #MUDHUMALAI #CONTROVERSY