'மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...' "வாசகம் மட்டும் எழுதி வச்சிருக்கீங்க..." "நீங்க மட்டும் என்ன திருக்குறளையா எழுதி வச்சிருந்தீங்க..." 'திமுக' உறுப்பினருக்கு 'அமைச்சர்' தந்த 'பதில்' ...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 13, 2020 03:35 PM

"மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் இருக்கிறது. ஆனால் மதுகடைகளை மூடாமல் இருக்கிறதே" என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் மட்டும் என்ன திருக்குறளையா? எழுதி வைத்திருந்தீர்கள் என அமைச்சர் தங்கமணி காட்டமாக பதிலளித்தார்.

thangamani questions did dmk wrote thirukkural on tasmac

சட்டப்பேரவையின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், "மதுபான கடைகள் அதிகப்படியாக திறந்திருப்பதாகவும், மதுபானம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகங்கள் இருக்கிறது. ஆனால் மதுகடைகளை மூடாமல் இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, "உங்கள் ஆட்சியில் நீங்கள் மட்டும் என்ன திருக்குறளையா எழுதி வைத்திருந்தீர்கள்" என காட்டமாக பதிலளித்தார். மேலும், 2006-2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோது, விழிப்புணர்வுக்காக கூட நிதி ஒதுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தற்போதைய அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் "படிப்படியாக மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tags : #ASSEMBLY #MINISTER #THANGAMANI #TAMILNADU