VIDEO: "டேய் வாடா வாடா, செருப்ப கழட்டு டா!"... சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நடந்து சென்ற போது, அவர் செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடிங்க சிறுவனை அழைத்து அமைச்சர் அவரது செருப்பை கழற்றச் சொன்னார்.

அமைச்சர் கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினார். அதேபோல், அதிகாரி ஒருவரும் அதற்கு உதவினார். இந்த சம்பவம் நிகழ்ந்த போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுடன் மாவட்ட ஆட்சியர், உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுடன், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Tags : #MINISTER #TRIBE #MUDHUMALAI
