"பத்த வச்சிட்டியே பரட்டை..." அமைச்சர் ஜெயக்குமாரின் "இது எப்படி இருக்கு" கமெண்ட்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக குறிப்பிட்டார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் பத்திரிகையின் பொன்விழா ஆண்டு விழாவில், ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. ஈ.வெ.ராமசாமி குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். 'ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும் என்றும், பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ரஜினிக்காந்தின் சர்ச்சைக் கருத்தை, 16 வயதினிலே படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தைக் கொண்டு அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக குறிப்பிட்டது செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
