VIDEO: ‘இப்போ எப்டி அட்டாக் பண்ணுதுனு பாப்போம்’.. கொரோனா வைரஸ்-க்கு டஃப் கொடுக்கும் ‘அல்ட்ரா லெவல்’ ஐடியா..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 16, 2020 07:49 AM

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க இத்தாலி நாட்டை சேர்ந்த முதியவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Coronavirus: Italian man wears large disc to enforce social distance

சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸ்ஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது இத்தாலி உள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பலர் வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் யாரும் தன்னை நெருங்க முடியாத வகையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இடுப்பைச் சுற்றி 1 மீட்டர் ஆரம் கொண்ட தகட்டை கட்டிக்கொண்டு வந்து கவனம் பெற்றுள்ளார். இதை கட்டிக்கொண்டு பொது இடங்களுக்கு அவர் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #CORONAVIRUSOUTBREAK #CORONAVIRUSUPDATES #COVID19 #ITALY #VIRAL