VIDEO: 'GO கொரோனா... கொரோனா GO BACK!'... கொரோனா வைரஸை கண்டித்து... கோஷங்கள் எழுப்பி 'மத்திய அமைச்சர்' போராட்டம்!... இணையத்தை தெறிக்க விடும் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 13, 2020 01:42 PM

கொரோனாவிற்கு எதிராக Go கொரோனா... Go back கொரோனா என முழக்கங்கள் எழுப்பியவாறு மத்திய அமைச்சர் போராட்டம் நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

central minister chanting goes viral in protest against corona

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை நம் நாட்டில்,  கொரோனாவால் 75 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற விழிப்புணர்வை பல்வேறு வகைகளில் மக்களிடம் கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், உயிர்களை காவுவாங்கும் கொரோனா வைரஸை கண்டிக்கும் விதமாக, Go கொரோனா... Go back கொரோனா... கொரோனா Go back போன்ற முழக்கங்கள் எழுப்பியவாறு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நூதன போராட்டத்தில் ஈடுபட்ட செயல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

 

Tags : #MINISTER #CORONAVIRUS #PROTEST #VIRAL