‘2 நாள் டைம் குடுங்க ப்ளீஸ்!’.. சொல்ல சொல்ல கேட்காமல் இளைஞரை சரமாரியாகத் தாக்கும் இளைஞர்கள்.. வீடியோவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 19, 2020 01:27 PM

மத்தியப் பிரதேசத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு இளைஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பதறவைத்துள்ளது.

சரமாரியாகத் தாக்கப்படும் இளைஞர் | men assaults man video went viral

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஆனால் அந்த கடனுக்கு,  இதுவரை வட்டி மட்டுமே 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டியதால் கொடுத்த கடனை திருப்பித் தருமாறு அந்த இளைஞர் கடன் பெற்ற இளைஞரை வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனை அடுத்து, கடன் கொடுத்தவர் தனது கடனை, கடன் வாங்கிய இளைஞரிடம் இருந்து வசூலிக்கும் நோக்கில்,  அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு நபரை அணுகியுள்ளார். அந்த நபரோ தனது கூட்டாளிகளுடன் வந்து கடன் பெற்ற இளைஞரை கட்டிவைத்து சரமாரியாகத் தாக்குகிறார்.

அந்த வீடியோவில், கடன் பெற்ற இளைஞர் வலி தாங்காமல் அழுவதும் கடனை 2 நாட்களுக்குள் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறியும் அவர் தொடர்ந்து தாக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : #MADHYAPRADESH