‘3 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம்’.. விடாது பழிவாங்கும் காக்கா..! வியப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 04, 2019 12:30 PM

இறந்த குஞ்சுக்காக 3 வருடங்களாக ஒரு நபரை காகம் பழி வாங்க துரத்தும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Revengeful crows target MP man in 3 year old vengeance

மத்தியபிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சுமேலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா கேவத். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வலையில் சிக்கிய ஒரு காக்கை குஞ்சை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த குஞ்சு அவரின் கையிலேயே உயிரை விட்டுள்ளது. இதனால் தனது குஞ்சு இறப்புக்கு சிவா தான் காரணம் என நினைத்துக்கொண்ட காகங்கள், அவரை விடாது துரத்த ஆரம்பித்துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாக அவரை பழிவாங்க காகங்கள் விரட்டி வருகின்றன. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே கையில் குச்சியை எடுத்துக்கொண்டு செல்கிறார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ நான் அந்த குஞ்சை கொன்றுவிட்டதாக காக்கைகள் நினைத்துவிட்டன. ஆனால் நான் காப்பாற்றவே நினைத்தேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிவாவை அடையாளம் வைத்து தொடர்ந்து பழிவாங்க காகங்கள் வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #REVENGEFUL #CROWS #MAN #VENGEANCE #MADHYAPRADESH