‘அங்கன்வாடி மையத்தில் கழிவறையில் தயாரிக்கப்படும் உணவு’... 'அமைச்சரின் பேச்சால் எழுந்த சர்ச்சை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 24, 2019 02:22 PM

அங்கன்வாடி மையத்தின் கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அம்மாநில அமைச்சர் விளக்கம் அளித்திருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nothing wrong in cooking inside toilet, says MP minister

மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி மாவட்டம் கரேரா என்ற இடத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, கழிவறையில் சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பொருட்கள் கழிவறையின் மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் ஆகியவையும் அங்கேயே இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர்  இமார்தி தேவி, ‘கழிவறையில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். வீட்டில் குளியல் அறையுடன் கழிவறை இணைந்து இருந்தால், உறவினர்கள் உங்கள் வீட்டில் உணவு அருந்த மறுப்பார்களா? குளியல் அறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் கூட நமது வீடுகளில் பாத்திரங்களை வைத்திருக்கிறோம்.

அந்த அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும், ஸ்டவுக்கும் இடையே இடைவெளி உள்ளது. எனவே, கழிவறைக்குள் சமைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என கூறினார். இதனால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : #BIZZARE #MADHYAPRADESH #ANGANWADI #CHILD #MIDDAYMEAL