‘கோட்டையில் இருந்து குதித்து’... ‘சிறப்பு ஆயுதப்படை வீரர் மற்றும் இளம் பெண் எடுத்த சோக முடிவு’.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 08, 2020 07:35 AM

சிறப்பு ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SAF jawan and a girl commits suicide jumped from Gwalior Fort

சிறப்பு ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் கோட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து விசாரித்துவரும் போலீஸார், சிறப்பு ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த வீரரின் அடையாளத்தை அவரது அடையாள அட்டையை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் அவருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட அப்பெண் அவருக்கு தெரிந்தவரா? அல்லது தெரியாதவரா? அந்த பெண் யார் உள்ளிட்ட விபரங்களை குறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #MADHYAPRADESH