‘நேசமணிக்கு அடுத்து உலகளவில் டிரெண்டான ஹேஷ்டேக்’.. ‘தல’ க்ளவுஸ் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 07, 2019 02:29 PM

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் க்ளவுசில் உள்ள இந்திய ராணுவத்தின் முத்திரை குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

MS Dhoni not to remove Army insignia, Says Vinod Rai

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் க்ளவுசில் இந்திய ராணுவத்தின் முத்திரை இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிரவே அது வைரலானது.

இதனை அடுத்து இதுபோன்ற முத்திரை பதித்த க்ளவுசை பயன்படுத்துவது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என ஐசிசி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் அந்த முத்திரை நீக்க வேண்டும் என பிசிசிஐக்கு ஐசிசி நிர்வாகம் அறிவுறித்தியது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தோனிக்கு ஆதரவாக #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக்கை பலரும் டுவிட்டரில் பதிவிட்டு உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிசிசிஐ நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய்,‘தோனியின் க்ளவுசில் இருக்கும் முத்திரை வியாபார நோக்கமானதோ அல்லது மதத்தை குறிப்பதாகவோ இல்லை. இந்திய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. தோனிக்கு பின்னால் நாங்கள் துணை நிற்போம். தோனியின் க்ளவுசில் அந்த முத்திரை இடம்பெற ஐசிசி-யிடம் முறையான கோரிக்கை வைக்கப்பட உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICC #BCCI #MSDHONI #ARMYINSIGNIA #DHONIKEEPTHEGLOVE