மாணவனிடம் 'கழிவை' அள்ள சொன்ன விவகாரம்... பணியிடை 'நீக்கம்' செய்யப்பட்டிருந்த ஆசிரியைக்கு 'ஐந்து' ஆண்டுகள் சிறை.
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Issac | Jan 10, 2020 05:21 PM
நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவனைக் கொண்டு, சக மாணவனின் கழிவை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆசிரியை விஜயலட்சுமி 2-ஆம் வகுப்பு மாணவனான ஒருவரை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவனின் கழிவை அள்ள சொன்னதாக புகார் எழுந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையிடம் கூறியதையடுத்து, அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆசிரியை விஜயலட்சுமி மீது போலீசார் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவில் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags : #TEACHER #PUNISHMENT #NAMAKKAL