‘இத பண்றவரை கீழ இறங்கவே மாட்டேன்’.. செல்போன் டவர் உச்சிக்கு சென்ற இளைஞரின் பரபரப்பு நிமிடங்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 10, 2020 04:52 PM

திருவாரூர் அருகே இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thiruvarur youth protest on cellphone tower for money

திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரி திருவிடைவாசல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரியல் எஸ்டேட் முகவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். டவரின் உச்சிக்கு சென்ற அவர், ‘ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் என்பவரிடம் வீட்டு மனைகள் வாங்க பலரிடமிருந்து ரூ.20 லட்சம் வசூல் செய்து கொடுத்தேன். ஆனால் வீட்டுமனைகள் கிடைக்கவில்லை. பணமும் திருப்பி தரப்படவில்லை. அதனால் நீதிமோகனை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும். அதுவரை இறங்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசாருடன் வந்த தாசில்தார் நக்கீரன், செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த ரமேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக தீயணைப்புப்படை வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதனை அடுத்து 5 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் ரமேஷ் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #PROTEST #THIRUVARUR #CELLPHONETOWER #YOUTH