‘இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. காயத்தால் உலகக்கோப்பை தொடரைவிட்டு விலகிய நட்சத்திர வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 04, 2019 06:55 PM

இந்தியாவுக்கு எதிரான போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

World Cup 2019: Steyn ruled out of World Cup due to shoulder injury

உலகக்கோப்பை லீக் சுற்றின் 8 -வது போட்டி நாளை சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட இருப்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மோசமாகவே அமைந்துள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடிய போது எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் சரியாகததால் ஸ்டேய்ன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹெண்ட்ரிக்ஸ் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் இருந்து டேல் ஸ்டெய்ன் விலகியது தென் ஆப்பிரிக்க  அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #DALE STEYN