‘மனைவி, மகனை கொலை செய்த தந்தை..’ கதறியபடி செல்ஃபோனில் வீடியோ எடுத்த மகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 03, 2019 02:13 PM

பெங்களூருவில் 45 வயது நபர் மனைவியையும் மகனையும் கொலை செய்வதை அவரது மகள் கதறியபடி செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bengaluru man kills wife and son daughter shoots video

முதலில் தன்னுடைய மனைவியைக் கொலை செய்தவர் அடுத்து 12 வயது மகனை கழுத்தில் போர்வையை இறுக்கி கொலை செய்துள்ளார்.  கதறி அழுதபடி இதை அவரது 17 வயது மகள் செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்தக் கொடூரம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் அந்த பெண் சொல்ல அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் ஒரு சிட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். அதனால் தான் என் மனைவி, மகனைக் கொலை செய்தேன். அதற்குள் என் மகள் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டார்” எனக் கூறியுள்ளார். போலீஸார் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் முயற்சியில் உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #MAN #KILLS #FAMILY