'அடுத்த 2 நாட்கள்'... 'இப்படி இருக்க வாய்ப்பு’... 'சென்னை வானிலை மையம் தகவல்'... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 11, 2020 03:49 PM

கடும் வெயில் தற்போது அடித்து வரும் நிலையில், வரும் 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai IMD report on Weather for next 2 Days in TN

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை இயல்பான வெப்பநிலையே காணப்படும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 50 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 30 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags : #CLIMATE #CHENNAI #IMD