'துப்பட்டாவை கட்டிக்கொண்டு விளையாடிய'... '9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 04, 2019 07:53 PM

கோவையில் விளையாடியபோது துப்பட்டா கழுத்தை இறுக்கி, 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 year old boy died while playing tied with dupatta

கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவரது மகன் காஜா உசேன் (9). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு ஜன்னலில் துப்பட்டாவை கட்டி, அதன் மறு முனையில் தனது கழுத்தில் கட்டியபடி கட்டிலின் மீது விளையாடி கொண்டிருந்துள்ளார் சிறுவன் காஜா உசேன். அப்போது எதிர்பாராத விதமாக  சிறுவன், கட்டிலில் இருந்து விழுந்துள்ளார்.

இதில் துப்பட்டா கழுத்தில இறுக்கியதில் மூச்சு திணறிய அவர் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர், இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த காஜா உசேனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காஜா உசேனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #DIED #BOY