‘தனியாக விட மனமில்லை’... ‘பைரவியை வைத்துக் கொண்டு’... ‘உணவு டெலிவரி செய்யும்’... 'வித்தியாசமான மனிதர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 05, 2019 08:14 PM
மனிதர்களைவிட சிலருக்கு நாய் என்றால் அவ்வளவு பிரியம். அதன்மீது தங்களது உயிரே வைத்து இருப்பார்கள். அவர்களது மனிநேயம் பாராட்டுக்குரியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நபர் தான் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரேம்.
கடந்த 3 வருடங்களாக ஸ்விக்கி ஆன்லைன் டெலிவரி பாயாக வலம் வரும் இவர், தன்னுடனே நாள் முழுவதும், தனது ஸ்கூட்டியின் முன் பகுதியில் தனது செல்ல நாயான பைரவியை வைத்துக்கொண்டு உணவு டெலிவரி செய்து வருகிறார். வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றுவிடுவதால், சிறு குட்டியாக இருந்த பைரவியை தனியாக வீட்டில் விட்டு செல்ல மனமின்றி, கடந்த ஒரு வருடமாக தன்னுடன் வைத்துக்கொண்டு உணவு டெலிவரி செய்து வருகிறார் பிரேம். தற்போது பைரவிக்கு ஒன்றரை வயது ஆகிறது.
சொல்வதைக் கேட்டு அறிவுடன் நடந்துகொள்ளும் பைரவி, எந்த வாடிக்கையாளரையும் இதுவரை அச்சுறுத்தியதோ, கடித்ததோ இல்லை என்று கூறுகிறார் பிரேம். மழை நேரங்களில் கூட பிரேமுடனே பயணிக்கும் பைரவிக்காக, தனியாக கோட்டும் தைத்து வைத்துள்ளார் பிரேம். பைரு என்று செல்லமாக அழைப்பதாக கூறும் பிரேம், தன்னுடன் 10 முதல் 12 மணி நேரங்கள் வரை சென்னையை சுற்றி வலம் வருவதாக தெரிவித்துள்ளார். போகலாம் என்றதும் சமர்த்ததாக, ஸ்கூட்டியின் முன்பக்கம் ஏறி நின்று கொள்கிறது இந்த பைரு என்ற பைரவி.